கனடா கோர விபத்தில் சிக்கிய யாழ். குடும்பம்; உயிருக்கு போராடும் தாயார்!

கனடாவில் நடந்த கோர விபத்தில் யாழ்ப்பாணம் இணுவிலை பின்புலமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மற்றும் மகள் சிக்கியிருந்தனர்.

புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் மகன் மற்றும் மகள் பலியான நிலையில், உயிரிழந்தவர்களின் தாய் உயிருக்கு ஆபத்தான நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இக் கோர விபத்து கடந்த புதன் கிழமை பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 52 வயதான பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்த விபத்தில் 21 வயது மகனும், 23 வயது மகளும் இருவரும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் யாழ்ப்பாணம் இணுவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்தில் 46 வயதான ட்ரக் வண்டியின் சாரதிக்கு காயங்கள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்கான சாட்சிகளை தேடி வருவதாக தெரிவித்த பொலிஸார் , சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தகவல் தெரிந்தவர்கள் யார்க் பிராந்திய காவல்துறையின் முக்கிய விசாரணைப் பிரிவை 1-866-876-5423, நஒவ என்ற எண்ணில் அழைக்கலாம் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
Previous Post Next Post