யாழ்.முகமாலையில் பேருந்து - டிப்பர் நேருக்கு நேர் மோதி கோர விபத்து! (படங்கள்)

யாழ்.முகமாலை பகுதியில் கண்ணிவெடியகற்றும் தொண்டு நிறுவனம் ஒன்றின் பேருந்தும் - டிப்பர் வாகனமும் மோதி வித்துக்குள்ளாயியுள்ளது.

முகமாலையில் அமைந்துள்ள மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பிரிவினரின் halo trust நிறுவனத்திற்கு பணியாளர்களை ஏற்றி பயணித்த பேரூந்து திரும்ப முற்பட்ட வேளையே விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பளை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு பின் கிளிநொச்சி வைத்தியசாலையில் 15 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், யாழ்.போதனா வைத்தியசாலையில் 10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏனையோர் பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிகவிசாரணைகளை பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.Previous Post Next Post