யாழில் பேருந்தில் யுவதியை பிளேட்டினால் வெட்டிக் காயப்படுத்திய இளைஞன்!

யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி பயணித்த பேருந்தில் பெண் ஒருவரை பிளேட்டினால் வெட்டிய இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் யாழ்.எழுதுமட்டுவாழ் பகுதியில் இடம்பெற்றுள்ளது. பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர். மடக்கிப்பிடித்த இளைஞனை யாழ்.எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர்.
Previous Post Next Post