யாழில் மணல் கடத்தல் கும்பலின் அட்டூழியம்! 19 வயது இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்!!

மணல் கடத்தல் கும்பல் தொடர்பாக விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கியதாக கூறி 19 வயதான இளைஞன் மீது மணல் கடத்தல் கும்பல் நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.

நேற்றிரவு குறித்த தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தாக்குதலில் குடத்தனை மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய பவானந்தராசா தர்சியன் எனும் இளைஞனே காயமடைந்துள்ளார். காயமடைந்தவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில், விசேட அதிரடிப் படையினரால் அழைத்துச் செல்லப்பட்ட கப்ரக வாகனத்தின் உரிமையாரும் சில இளைஞர்களும் சேர்ந்தே, குடத்தனை மேற்கை சேர்ந்த இளைஞர் மீது தாக்குதல் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post