
இந்நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறை மீண்டும் வலுப்படுத்தி, அந்நிய செலாவணியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் காட்டாரில் நடைபெறும் உலகக் கிண்ண காற்பந்து போட்டித்தொடரில் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தமிழ் இளைஞன் ஒருவர் செயற்பட்டுள்ளார்.
கட்டாரில் உலகளாவிய ரீதியிலுள்ள காற்பந்தாட்ட ரகசியர்கள் குவிந்துள்ள நிலையில், அவர்களை இலங்கைக்கு வருமாறு அழைக்கும் நடவடிக்கையில் அவர் ஈடுபட்டுள்ளார்.
கட்டாரில் பணி புரிந்து வரும் இலங்கையை சேர்ந்த நவரட்னம் தனரூபம் என்ற இளைஞனே இந்த செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.
பயணிகளை கவனத்தை ஈர்க்கும் வகையில் பதாகை ஒன்றின் மூலம் இந்த அழைப்பினை விடுத்துள்ளார்.

