வியாழக்கிழமை அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தை சேர்ந்த 17 மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.கல்வின் விஜயவீர என்ற மாணவரே உயிரிழந்துள்ளார்.
சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் உள்ள பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த கல்வின்விஜயவீர விபத்தில் சிக்குண்டு உயிரிழந்துள்ளார்.
வான் ஒன்றுடன் மற்றுமொரு வாகனம் மோதிய விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார்- 90 வயது பெண்ணொருவர் செலுத்திய மிட்சுபி லான்சர் செடான் வாகனம் இன்னுமொரு வாகனத்துடன் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மாணவர் காருக்கு அடியில் சிக்குப்பட்டார் அவரை காப்பாற்றுவதற்கு அவசரசேவையினர் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
கொழும்பில் பிறந்த இளைஞனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
