யாழில் வயோதிபப் பெண்ணிடம் 2 பவுண் சங்கிலியை ஆட்டயப் போட்ட போலி கிராம சேவகர்!

கிராம சேவகர் என்று தன்னை போலியாக அடையாளப்படுத்திய நபர் ஒருவர் , வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த 2 பவுண் தங்க சங்கிலியை பறித்துச் சென்று சம்பவம் ஒன்று கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.

தனியார் மருத்துவமனைக்குச் சென்று விட்டு கோண்டாவில் மேற்கில் உள்ள தனது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த 75 வயதான பாட்டியிடம், மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், தன்னை கிராம அலுவலர் என்று போலியாக அடையாளப்படுத்தியுள்ளார்.

உங்களுக்கு 70,000 ரூபாய் உதவித் தொகை வந்துள்ளது என்றும் உடனடியாக என்னுடன் வாருங்கள் என்றும் தெரிவித்து குறித்த நபர் அழைத்துள்ளார். அதை உண்மை என்று நம்பி அந்த வயோதிபப் பெண் சென்றுள்ள நிலையில், நந்தாவில் பகுதியில் 2 பவுன் சங்கிலியை அறுத்துக் கொண்டு குறித்த நபர் தப்பித்துச் சென்றுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post