கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த சொகுசு பேருந்து கவிழ்ந்தது! 22 பேர் காயம்!! (வீடியோ)

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த சொகுசு பஸ் கிளிநொச்சி இரணைமடு அருகில் விபத்துக்குள்ளானதில் 22 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று (05) அதிகாலை 4.45 மணியளவில் விபத்து இடம்பெற்றது.

குறித்த சொகுசு பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கிளிநொச்சி இரணைமடு அருகில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதன்போது குறித்த பஸ்ஸில் பயணித்த 22 பேர் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ் விபத்து தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
Previous Post Next Post