யாழில் மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சேலை சிக்கி விபத்து! பெண் உயிரிழப்பு!!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய பெண் உயிரிழந்துள்ளதுடன், அவருக்குப் பின்னால் மோட்டார் சைக்கிளில் பயணித்த மகள் காயமடைந்த நிலையில் யாழ். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்து சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post