வியட்நாமில் உயிரிழந்த யாழ்.நபரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு! (வீடியோ)

கனடாவுக்குச் சட்டவிரோதமாக படகில் சென்று வியட்நாமில் உயிரிழந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோதமாக படகு மூலம் கனடா செல்ல முற்பட்டு படகு பழுதடைந்த நிலையில் நடுக் கடலில் தத்தளித்த சுமார் 303 அகதிகளும் கடந்த மாதம் 08 ஆம் திகதி விநயட்நாம் அழைத்துச் செல்லப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் தங்களை நாட்டுக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் எனத் தெரிவித்து கடந்த மாதம் 18 ஆம் திகதி இரு அகதிகள் தற்கொலைக்கு முயன்றனர்.

இருவரும் வியட்நாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி யாழ்.சாவகச்சேரியைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சுந்தரலிங்கம் கிரிதரன் (வயது-37) என்பவர் உயிரிழந்தார். இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் வியட்நாமிலிருந்து விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு நேற்றைய தினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இன்றைய தினம் அவரின் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
Previous Post Next Post