வெளிநாடு செல்வதற்காகக் கொழும்பில் தங்கியிருந்த யாழ்.இளைஞன் உயிர் மாய்ப்பு! மரணத்தில் சந்தேகம்!!

வெளிநாடு செல்வதற்காக கொழும்பில் தங்கி இருந்த இளைஞன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் சிறுப்பிட்டிப் பகுதியைச் சேர்ந்த கணேஷ் துஜீவன் (வயது - 23) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞனின் இறப்பில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்ப்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post