அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஆர்ஜண்டினா அணி! விசாரணைக்குக் கோரிக்கை!! (படங்கள்)

உலகக் கோப்பையை வென்ற ஆர்ஜெண்டினா அணி அநாகரிகமான முறையில் நடந்து கொள்வதாகவும், அவமதிப்பு செயல்களில் ஈடுபடுவது  தொடர்பாகவும் FIFA விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆர்ஜண்டினா அணி அந்நாட்டுக்குத் திரும்பியதும் வெற்றிக் கொண்டாத்தில் ஈடுபட்டனர். அதன்போது பிரெஞ்சு வீரர் எம்பாபேயின் உருவப்படம் தாங்கிய பொம்மை ஒன்றை ஆர்ஜண்டினா கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ் கைகளில் வைத்துக் கொண்டு வெறிக்களிப்பில் ஈடுபட்டார். அதன்போது
அநாகரீகமான முறையிலும் நடந்துகொண்டார். மேலும் எம்பாபேயின் புகைப்படம் ஒட்டப்பட்ட சவப்பெட்டி ஒன்றும் எரியூட்டப்பட்ட காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மேற்படி செயல்களுக்கு பிரான்சின் பொருளாதார அமைச்சர் Bruno le Maire கண்டனம் வெளியிட்டுள்ளார். FIFA இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டு உள்ளது. அடுத்தவர்களை மரியாதையாக நடத்த வேண்டும் என்பது விளையாட்டில் அடிப்படை நாகரீகம். ஆர்ஜண்டினா கண்ணியமற்று நடந்துகொள்கிறது. இதனை FIFA கண்டிக்க வேண்டும். அத்துடன் அவமதிப்பு செயல் குறித்து விசாரணைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பரிசில் உள்ள ஆர்ஜண்டினா தூதரகம் பதிலளிக்க மறுத்துள்ளது.
Previous Post Next Post