பரிஸ் Bondy இல் துப்பாக்கிச் சூடு! இளைஞன் உயிரிழப்பு!!

பரிஸ் புறநகரான Bondy இல் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் கொல்லப்பட்டார்.

மாலை 7 மணி அளவில் வீதியில் வைத்து இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. ஆயுததாரி ஒருவன் மகிழுந்தில் வந்து, துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இத்துப்பாக்கிச்சூட்டில் 25 வயதுடைய ஒருவர் பலியானதாக அறிய முடிகிறது.

பண கொடுக்கல் வாங்கலில் தொடர்புடையதாக இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மருத்துவக்குழுவினர் குறித்த நபருக்கு முதலுதவி சிகிச்சைகள் அளிக்க முற்பட்டும் அவரை காப்பாற்ற முடியாமல் போயுள்ளதாக தெரிவித்தனர்.
Previous Post Next Post