கிளிநொச்சி-உதயநகர் பகுதியில் செல்லப்பிராணியை மீட்க கிணற்றில் இறங்கிய நபர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று காலை கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உதயநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
செல்லப்பிராணியாக வளர்க்கப்பட்ட வீட்டு நாய் கிணற்றில் விழுந்துள்ளது. குறித்த நாயை மீட்பதற்காக இளைஞன் பாதுகாப்பற்ற அக் கிணற்றில் கயிறு ஒன்றை பயன்படுத்தி இறங்கியுள்ளார்.
இதன்போது கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த குறித்த இளைஞன் கிணற்றிலிருந்து வெளியேறாத நிலையில் தந்தை அயலவரின் உதவியுடன் உதவியுடன் தேடியுள்ளார்.
இதன்போது குறித்த கிணற்றில் சேற்றில் புதைந்த நிலையில் குறித்த இளைஞன் மாட்டிக் கொண்டமையால் உயிர் இழக்க நேரிட்டுள்ளது. இந்த நிலையில் அயலவர்களின் உதவியுடன் நீர் இறைக்கப்பட்டு குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் 24 வயதுடைய விவேகாநந்தன்-வேணிலவன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.