துவிச்சக்கரவண்டியை மோதித் தள்ளி அரச பேருந்து! முதியவர் உயிரிழப்பு!! (படங்கள்)

கிளிநொச்சி முகமாலை பகுதியில் விபத்தில் முதியவர் ஒருவர் பலியாகியுள்ளார். பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த விபத்து சம்பவம் 5 மணியளவில் முகமாலை சந்தியில் இடம்பெற்றுள்ளது.

கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்து துவிச்சக்கரவண்டியில் பயணித்தவருடன் மோதியுள்ளது. இதன்போது துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரித்துள்ளார்.

உயிரிழந்தவர் இத்தாவில் பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய முத்தையா கந்தசாமி என தெரியவந்துள்ளது.

துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் எதிர் திசையில் பயணித்ததாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திடீர் என மறுபக்கம் திருப்ப முற்பட்ட நிலையில் பின்னால் பயணித்த கார் பேருந்து பயணித்த திசைக்கு திருப்பப்பட்டுள்ளது.

விபத்தை தவிர்க்கும் நோக்குடன் பேருந்தை செலுத்திய சாரதி காருடன் மோதாத வகையில் மறு பக்கம் பேருந்தை திருப்பியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவருகிறது.

சடலம் பளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post