யாழிலிருந்து சென்ற ரயில் கார் மற்றும் பேருந்தை மோதித் தள்ளியது! 3 பேர் காயம்!! (படங்கள்)

காங்கேசன்துறையில் இருந்து வவுனியா நோக்கி காலை பயணித்த யாழ்ராணி ரயில் ஓமந்தையில் ரயில் கடவையை கடந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை வவுனியா - ஓமந்தை பகுதியில் சடுதியாக புகையிரத கடவையை கடக்க முயன்றபோது இடம்பெற்றுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் பேருந்து மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்து இன்றைய தினம் (20.02.2023) காலை 8.15 மணியளவில் கிளிநொச்சி - அறிவியல் நகர் ரயில் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்திற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற அரச பேருந்து, ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது, யாழ்ப்பாணத்திலிருந்து முறிகண்டி நோக்கிப் பயணித்த யாழ்ராணி புகையிரதம் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் காயமடைந்த மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post