யாழ்.பண்ணைக் கடலில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்! (படங்கள்)

யாழ்ப்பாணம் பண்ணை கடலில் பெண் ஒருவரின் சடலம் மிதப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலத்தை மீட்பதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இன்று மாலை 4 மணியளவில் கடலுக்கு சென்ற மீனவர் ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் அதனை மீட்பதற்காக நீதிமன்றின் உத்தரவை பெறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலதிக விசாரணைகளின் பின்னரே தகவல் வழங்க முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post Next Post