
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை மார்ச் 9ஆம் திகதி நடத்துவதற்கு போதிய நிதி இல்லாமை போன்ற சிரமங்களை சுட்டிக்காட்டி தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றில் சிறப்பு பிரேரணை ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேறு சில காரணங்களில் அரச அச்சகத்தினால் தேவையான வாக்குச்சீட்டுகளை அச்சிட இயலாமை மற்றும் போக்குவரத்துக்கு போதுமான எரிபொருள் விநியோகம் இல்லாதது ஆகியவை அடங்கும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிதி பற்றாக்குறை காரணமாக அடுத்த மாதம் திட்டமிடப்பட்டபடி நடக்காது என்றும் குறைந்தது 8 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்று அரச உயர்மட்டம் தெரிவித்துள்ளது.