கிளிநொச்சியில் பதற்றம்! பாடசாலை விளையாட்டுப் போட்டியில் புகுந்து தாக்குதல்! 5 பேர் காயம்!! (படங்கள்)

கிளிநொச்சி, சாந்தபுரம் கலைமகள் வித்தியாலய விளையாட்டு போட்டியில் இனந்தெரியாதவர்கள் புகுந்து தாக்குதல் நடத்தியதில் ஐவர் காயமடைந்துள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது. பாடசாலை வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த நேரம், திடீர் என்று நுழைந்த நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி அடங்கலாக ஐவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கிராமத்தவர்களால் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரும் ஏற்கனவே பிரிதொரு குற்ற செயலுடன் தொடர்புபட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னர் விடுதலையானவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post