யாழ் மண்டைதீவில் பலப்படுத்தப்படும் சோதனை சாவடி!

தீவுப் பகுதியில் இடம்பெறும் திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்த மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் தீவுப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என யாழ்ப்பாண மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக புங்குடுதீவு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வேறு பகுதிகளுக்கு மாடு மற்றும் திருடப்படும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

முக்கியமாக ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற வேண்டும், எனவே கடற்படையினர் ஒத்துழைக்கவ வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

தீவு பகுதியில் மாடுகள் கடத்தல் மற்றும் ஏனைய திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் விவாதிக்கப்பட்ட போதே மேற்படி முடிவெடுக்கப்பட்டது.
Previous Post Next Post