பிரான்ஸில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு!

பிரான்ஸில்  பெற்றோலிய சுத்திகரிப்பு ஆலைகளின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதை அடுத்து, நாட்டின் பல இடங்களில் உள்ள நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகிறது.

கிட்டத்தட்ட 7 சதவீதமான நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் இல்லை என பிரெஞ்சு பெற்றோலிய நிறுவனங்களுக்கான ஒன்றியம் (l’Union française des industries Pétrolières -Ufip) நேற்று புதன்கிழமை மாலை அறிவித்துள்ளது.

சுத்திகரிப்பு ஆலைகளின் (les raffineries) ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஓய்வூதிய சீர்திருத்தத்தைக் கண்டித்து கடந்த செவ்வாய்க்கிழமை காலை முதல் இடம்பெற்று வரும் இந்த வேலை நிறுத்தத்தில் TotalEnergies மற்றும் Esso-ExxonMobil ஆகிய பெற்றோலிய நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் எரிபொருட்களின் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளது.
Previous Post Next Post