யாழில் இளைஞன் மீது துரத்தித் துரத்தி வாள்வெட்டு!

யாழ். அச்சுவேலி – மகிழடி வைரவர் கோவில் பகுதியில் இன்று மாலை இளைஞர் ஒருவர் மீது வாள்வெட்டு குழு ஒன்று துரத்தி.. துரத்தி.. வாள்வெட்டு நடத்தியுள்ளது.

இரு குழுக்களுக்கிடையில் தொடர்ச்சியாக முறுகல் நிலை இருந்துவருவதாக அச்சுவேலி பொலிஸார் கூறுகின்றனர். இந்நிலையில் ஒரு குழுவை சேர்ந்த இளைஞன் அச்சுவேலி நகருக்கு வந்திருந்த நிலையில் மற்றைய குழுவை சேர்ந்த ரவுடிகள் அவனை துரத்தி.. துரத்தி.. வெட்டிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தில் பாரதி வீதி பத்தமேனியை சேர்ந்த 27 வயதான இளைஞன் ஒருவனே வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சிக்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாகஅச்சுவேலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Previous Post Next Post