யாழில் காணித் தகராறு! JCP இயந்திரத்தால் வீட்டை இடித்தழித்த பெண் !! (படங்கள்)

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் காணி ஒன்றின் வேலிகளை உடைத்து, காணிக்குள் அத்துமீறி நுழைந்து வீடொன்றினை இடித்து அழித்த பெண் உள்ளிட்ட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அத்துடன் வீட்டினை இடித்தழிக்க பயன்படுத்திய JCB வாகனத்தினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் உள்ள ஆட்கள் அற்ற வீட்டினை சுற்றி கம்பி தூண்கள் நடப்பட்டு முட்கம்பி வேலிகள் அடைக்கப்பட்டு இருந்தன.

அந்த காணிக்குள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காலை JCB இயந்திரம் ஒன்றினை வாடகைக்கு அமர்த்தி அதனுடன் சென்ற பெண்ணொருவர் , வேலிகளை JCB இயந்திரத்தால் உடைத்து உள்நுழைந்து காணிக்குள் இருந்த வீட்டினை தரை மட்டமாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் , காணிக்குள் அத்துமீறி நுழைந்த பெண்ணை கைது செய்ததுடன் , JCB சாரதியையும் கைது செய்ததுடன் JBCயும் கைப்பற்றினர்.

இரு தரப்பினருக்கு இடையிலான காணிப்பிரச்சனையே சம்பவத்திற்கு காரணம் என தமது ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், அது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Previous Post Next Post