பாரிஸில் கை, கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

கை, கால்கள் கட்டப்பட்டிருந்த நிலையில் இளைஞன் ஒருவரது சடலத்தை பரிஸ் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இருந்து இச்சடலம் நேற்று செவ்வாய்க்கிழமை நண்பகல் மீட்கப்பட்டுள்ளது. சீனாவை பூர்வீகமாக கொண்ட 25 வயதுடைய இளைஞன் ஒருவர், கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு வாயில் துணி அடைக்கப்பட்டிருந்த நிலையில், சோபா இருக்கையில் சடலமாக கிடந்துள்ளார்.

சம்பவத்தை அடுத்து அவர் வசித்த வீடு முழுவதும் காவல்துறையினரால் தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது.

குறித்த நபர் திங்கட்கிழமை இரவு உயிருடன் இருந்தமைக்குரிய சாட்சியங்கள் கிடைத்துள்ளதாகவும், அன்றைய இரவு அல்லது நேற்று காலை அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

உடற்கூறு பரிசோதனைகளுக்காக சடலம் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
Previous Post Next Post