யாழில் சற்றுமுன் விபத்து! ஒருவர் உயிரிழப்பு!! (சிசிரிவி காணொளி)

யாழ்ப்பாணம் நகரில் பாரவூர்தி மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் முட்டாஸ் கடை சந்திக்கு அருகாமையில் இன்று முற்பகல் 11.45 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

தென்மராட்சி, மீசாலையைச் சேர்ந்த இராஐரட்ணம் அபிதாஸ் (வயது- 28) என்ற இளைஞரே உயிரிழந்தவராவார்.

இளைஞர் மோட்டார் சைக்கிளில் பயணித்து கொண்டிருந்தபோது பின்னாலிருந்து முந்திச் செல்ல முற்பட்ட பாரவூர்தி மோதுண்டு அதன் சில்லினுள் சிக்குண்டு உயிரிழந்தார் என்று ஆரம்ப விசாரணைகளின் பின் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Previous Post Next Post