யாழில் வீட்டுக்கு முன் புல் வெட்டிக் கொண்டிருந்தவரை மோதிக் கொன்ற வாகனம்! (CCTV காணொளி)

அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை வீதியில் கப் ரக வாகனம் மோதி ஆணொருவர் உயிரிழந்துள்ளார்.

வீட்டுக்கு முன்னால் உள்ள வீதியில் புல் செருக்கிக் கொண்டு இருந்தவேளை வீதியால் வந்த கப் ரக வாகனம் மோதி விபத்து சம்பவத்தில் அவர் உயிரிழந்துள்ளார்.

விபத்தில் சீனியர் சந்திரகாந்தன் (வயது-60) என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். 

வாகனத்தை செலுத்தியவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தாதி உத்தியோகத்தர் எனவும், அவர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சடலத்தின் மீதான பிரேத பரிசோதனைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Previous Post Next Post