'காரைநகர் தாதா' யாழில் கைது!

காரைநகரில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த காரைநகர் தாதா என அழைக்கப்படும் கயன் இன்று காலை மாவட்டபொலிஸ் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடி படையினரை தாக்கிய குற்றச்சாட்டில் நீண்டநாட்களாக தேடப்பட்டு வந்த காரைநகர் தாதா என அழைக்கப்படும் கயன் என்ற சந்தேக நபர் கட்டார் நாட்டுக்கு போலியான கடவுச்சீட்டினை பயன்படுத்தி தப்பிச்செல்ல முற்பட்டபோது இன்று காலை யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வுபிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி காரைநகர் ஊரி பகுதியில் விசேட அதிரடிப் படையினர் 8 கிலோ கஞ்சாவுடன் குறித்த சந்தேக நபரை கைது செய்ய முற்பட்டபோது விசேட அதிரடிப்படையினரை தாக்கி தப்பித்தார்.

அவருக்கு எதிராக ஏற்கெனவே மல்லாகம், ஊர்காவற்துறை நீதிமன்றங்களில் கஞ்சா வழக்கு நிலுவையில் உள்ளதோடு பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளுடன் தேடப்பட்டு வந்தார்.

காரைநகர் தாதா கட்டார் நாட்டுக்கு செல்வதற்காக, கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் நோக்கத்துடன், தனியார் பேருந்து ஒன்றில் யாழ்ப்பாண பேருந்து நிலையத்திற்கு வந்த போது யாழ் மாவட்ட பொலிஸ்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து போலியான கடவுச்சீட்டுகள் இரண்டும், கைத்தொலைபேசிகள் இரண்டும் மீட்கப்பட்டுள்ளன

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளுக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளார்.
Previous Post Next Post