யாழில் பரிதாபமாக உயிரிழந்த உயர்தர வகுப்பு மாணவி!

யாழ்ப்பாணத்தில் உயர்தர பாடசாலை மாணவி ஒருவர் தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டி உயிரிழந்துள்ளார். யாழ்.பாசையூரைச் சேர்ந்த லிசியஸ் மேரி சானுயா (வயது-19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

தனது சகோதரியின் ஆடை ஒன்றை உயிரிழந்த மாணவி அணிந்துள்ளார். இதனைக் குடும்பத்தினர் கண்டித்ததால் கோபமடைந்த மாணவி கடந்த 12 ஆம் திகதி தனக்குத் தானே மண்ணெண்ணெய் ஊற்றி தீ மூட்டியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 16 ஆம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சுண்டுக்குளி மகளிர் கல்லூரி மாணவியான இவர், க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 8 ஏ, பி பெற்று உயர் தரத்தில் உயிரியல் பிரிவில் கல்வி கற்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post