யாழில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த இளைஞன்!

யாழ்ப்பாணம், இணுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கொக்குவில் தெற்கு, தாவடியை சேர்ந்த தர்மலிங்கம் பவிசன் (25) என்ற இளைஞனே சடலமாக மீட்கப்பட்டார்.

இணுவில் வைத்தியசாலைக்கு அருகிலுள்ள வளவிலிருந்து, இரத்தம் வழிந்தோடிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டது.

சடலத்துக்கு அருகில் பீடி, பியர் ரின், தேசிக்காய், ஊசி உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.

போதைப்பொருளை ஊசி மூலம் உடலில் செலுத்துபவர்கள் தேசிக்காய் பயன்படுத்துவதால், இந்த இளைஞனும் போதைப்பொருள் செலுத்தியதால் உயிரிழந்திருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.

யழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று உடற்கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
Previous Post Next Post