சாவகச்சேரி நீதிமன்றத்துக்குத் தாக்குதல் திட்டம்! வெளியான தகவல் போலியானது!!

சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்கு வருகை தருபவர்களை இன்றைய தினம் விசேட சோதனைக்கு உட்படுத்தியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்துக்குத் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகக் கிடைத்த தகவலையடுத்து நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியிருந்தன.

இது தொடர்பில் எமது செய்திச் சேவை சாவகச்சேரி காவல்நிலையத்தைத் தொடர்பு கொண்டு வினவியது.

இதற்குப் பதிலளித்த குறித்த காவல்நிலையத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர், அவ்வாறான தாக்குதல் திட்டம் தொடர்பில் எந்த தகவல்களும் தமக்குக் கிடைக்கப்பெறவில்லை எனவும், நீதிமன்றத்துக்குப் போதைப்பொருளுடன் வருகைதருபவர்களைக் கைது செய்யும் நோக்கிலேயே சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
Previous Post Next Post