
வேலைக்குச் செல்வதற்காக தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது பதில் இல்லாமை காரணமாக குறித்த வீட்டிற்கு இன்று (30) காலை சென்று பார்த்தபோது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.
மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவை தொழிலில் ஈடுபடும் மாணிக்கம் சுப்ரமணியம் (52), சுப்ரமணியம் மேரி ரீட்டா (51) ஆகிய இருண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொடூரமான நிலையில் கற்களால் தலையில் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
திருடர்களால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
திருடர்களால் அவர்கள் அடித்துக் கொல்லப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.


