யாழ்ப்பாணத்தில் முகக் கவசம் அணிந்து இரவு வேளைகளில் வீடுகளுக்குள் நுழைந்து திருட்டில் ஈடுபடும் நபர் ஒருவரை கண்காணிப்புக் கமரா மூலம் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
கோப்பாய் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் குறித்த நபர் இரவு நேரங்களில் முகக் கவசம் அணிந்து சைக்கிளில் நடமாடுவதாகவும், இதுவரை 8 வீடுகளில் கொள்ளையிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனவே இது குறித்துப் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், குறித்த நபர் தொடர்பில் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.