யாழில் உலங்கு வானூர்தி மூலம் வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட நோயாளர்கள்! (வீடியோ)

நெடுந்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற 03 நோயாளர்கள் மேலதிக சிகிச்சையளிக்கும் வகையில் விமானப் படையின் உலங்கு வானூர்தி மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

யாழில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினம் (28.11.2024) அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் நெடுந்தீவில் இருந்து 03 நோயாளரும் அவர்களது 3 உதவியாளர்களும் உலங்கு வானூர்தி மூலம் பலாலி விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டு தரைவழியாக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Previous Post Next Post