பிரான்சில் நடந்த அனர்த்தம்! 1400 பேர் உயிரிழப்பு!! (வீடியோ)

ஐரோப்பாவில் கடந்த கோடைக் காலத்தில் ஏற்பட்ட அதிகரித்த வெப்பம் காரணமாக பிரான்ஸில் மட்டும் 1435 பேர் உயிரிழந்துள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் அறிவிப்பை அந் நாட்டு சுகாதார அமைச்சர் வெளியிட்டுள்ளார். உள் நாட்டு வானொலி சேவைக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்படி தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கடந்த யூன் மற்றும் யூலை மாதங்களில் வரலாறு காணாத அளவுக்கு ஐரோப்பிய நாடுகளில் கடும் வெப்பம் நிலவியது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் அங்கு 46 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியிருந்தது.

குறிப்பாக பிரான்ஸில் கடும் வெப்பம் நிலவியதுடன், அங்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டு, பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில்தான் பலரும் நோய்வாய்ப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டதுடன், இதில் பிரான்ஸில் மட்டும் 1435 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post