லிப்ட் இயக்குநரைத் தாக்கிய முன்னால் பொலிஸ் மா அதிபர் கைது!

லிப்ட் இயக்குநரைத் தாக்கிய குற்றச்சாட்டில் முன்னால் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017 ஆம் ஆண்டு பொலிஸ் தலைமையக லிப்ட் இயக்குபவரை தாக்கியமை தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தாக்குதலையடுத்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post