பருத்தித்துறையில் 17 வயதுச் சிறுவன் கிணற்றில் விழுந்து சாவு!

யாழ்ப்பாணம் பருத்தித்துறை இன்பருட்டிப் பகுதியில் பட்டம் ஏற்றி விளையாடிய 17 வயதுச் சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் அதேயிடத்தைச் சேர்ந்த ஜசன் (வயது-17) என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

சிறுவன் கிணற்றில் தவறி விழுந்த சில மணி நேரத்தின் பின்பே அவரை கிணற்றிலிருந்து உறவினர்கள் மந்திகை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டது.


Previous Post Next Post