விபத்தில் படுகாயமடைந்த அரச உத்தியோகத்தர் உயிரிழப்பு! (படங்கள்)

கடந்த 20 ஆம் திகதி மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

பருத்தித்துறை வீதி, கொடிகாமத்தைச் சேர்ந்த பளை பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றிய நடராஜா பிறேமவாசன் (வயது-45) என்பவரே உயிரிழந்தவர் ஆவார்.

ஏ-9 வீதி கொடிகாமம், இராமாவில் கோவில் பகுதியில் 20 ஆம் திகதி காலை 7 மணிக்கு மோட்டார் சைக்கிள் முன் சில்லு காற்றுப் போய் ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்திருந்தார்.

உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

Previous Post Next Post