யாழ்ப்பாணச் சீரடி பாபா ஆலயத்தில் நடக்கும் சீரழிவுகள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் ஈழத்துச் சீரடி சாயி பாபா என அழைக்கப்படும் ஆலயத்தில் நடக்கும் சமூக சீரழிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்திருக்கும் குறித்த ஆலயத்தில் கடந்த கிறிஸ்மஸ் தினத்தில் நடந்த பூசையில் பாபாவுக்குப் படைக்கப்பட்ட மதுபானங்கள் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பேசப்பட்டு வருகின்றது.

யாழ். மண்ணில் சைவம் தளைத் தோங்கிய ஆறுமுக நாவலர் பிறந்த பூமியில் அதுவும் வடக்கின் அடையாளமான நல்லூரில் சைவத்துக்கு நடந்த அவமானம் .

எத்தனையோ வருட யுத்தம் எத்தனையோ மதமாற்றங்கள் அத்தனையும் தாண்டி வளர்ந்த சைவ பாரம்பரியத்தையும் புகழ்பூத்த கைலாச பிள்ளயார் கோவில் அருகில் தொன்மை பொருந்திய மடத்தார் வளவு வைரவர் இதனிடையே முளைத்தவர் தான் இந்த இந்த சீரடி பாவா.

வெளிநாட்டுப் பணத்தில் கவர்ச்சியான திருவிழாக்கள், இளசுகளின் பொழுது போக்கிடம், ஆடம்பர உணவு என ஓகோ என வருமானம் . அவ்வளவுடனாவது நின்று விடவில்லை .

பாவாவுக்கு மதுபானம் படைத்து பூசையாம் . அதுவும் இந்துக்களின் புனித அடையாளமான நந்திக்கு முன்னால் மதுபானம் படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு சமய சீரழிவு மட்டுமல்ல, சமூக விரோத செயலும் கூட.

இன்று எமது சமூகம் எதிர் நோக்குகின்ற மிகப்பெரிய சவால் பாடசாலை மாணவர்களின் மதுபானப் பாவனைதான்.

மாணவர்களை அதில் இருந்து விடுவிக்கும் நல்வழிப்படுத்த வேண்டிய சமய நிறுவனங்கள் தமது நோக்கை மறந்து வழிதவறி போகின்றன என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமும் பிழையான முன்னுதாரணமும் ஆகும்.

இவ்வாறான செயற்பாடுகளை தொடர்ந்தும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்போமாயின் யாழ்ப்பாணத்திலும் நித்தியானந்தாக்கள் உருவாவதை தடுக்கவே முடியாது.

எனவே இவ்வாறான நாதாரிகளை இனங்கண்டு அப்புறப்படுத்தி எமது சமூகத்தை பாதுகாப்போம் .

சட்டத்துக்குப் புறம்பாக பொது இடத்தில் மதுசாரத்தை காட்சிப்படுத்துவதற்கு இந்த காட்சிகளை கண்டும் மதுவரித்திணைக்களம் மற்றும் பிரதேசசெயலாளர், மாநகரசபையினர் பேசாமடைந்தைகளாக இருந்தால் அவர்களும் குற்றவாளிகளே……
Previous Post Next Post