யாழில் காற்றாலை மின் உற்பத்திக்கு எதிர்ப்பு! ஊழியரைத் தாக்கிய மக்கள்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் தனங்கிளப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கு அப் பகுதி மக்கள் கடும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இந் நிலையில் இன்றைய தினம் அப் பிரதேச மக்கள் தனங்கிளப்புப் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் மின் உற்பத்தி நிலைய வளாகத்தில் உள்ள தற்காலிகக் கொட்டிலைச் சேதப்படுத்தினர்.

இதனால் பிரதேச மக்களுக்கும் காற்றாலை மின் உற்பத்தி நிலைய நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்திற்குச் சென்ற சாவகச்சேரி பொலிஸார் நிலைமைகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.Previous Post Next Post