மண்டைதீவு திருவெண்காட்டில் கஜமுக சங்காரம்! (படங்கள்)

மண்டைதீவு திருவெண்காடு சித்தி விநாயகர் ஆலயத்தில் நேற்று மாலை கஜமுக சங்காரம் இடம்பெற்றது.

இந்து மக்களினால் கடைப்பிடிக்கப்படும் விநாயக விரதங்களில் பிரசித்தி பெற்ற விரதம் விநாயகர் சஷ்டி விரதமாகும்.

இது கார்த்திகை மாத தேய்பிறைப் பிரதமை முதல் மார்கழி மாத வளர்பிறைச் சதுர்த்ததி வரையுள்ள 21 நாட்கள் அனுஷ்டிக்கப்படும். இவ் விரதத்தின் 20 ஆம் நாள் நிகழ்வே கஜமுக சங்காரம் ஆகும்.

ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து விநாயக பெருமான் வெளிவீதி எழுந்தருளி கஜமுகனுடன் போராடி கஜமுகனைச் சங்காரம் செய்தார்.Previous Post Next Post