அழகான யாழ்.குடாநாட்டை நரகமாக மாற்றும் யாழ்.மாநகர சபை! (படங்கள்)

அழகிலும், வீரத்திலும் முதன்மை பெற்றிருந்த யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

தற்போது யாழ்ப்பாணம் குப்பை கூழங்களால் சூழ்ந்து நரகமாக மாறி வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இயற்கை அழகினால் சூழப்பட்ட யாழ்ப்பாணம் இன்று குப்பை கூழங்களால் நிரம்பி வழிகின்றமை பார்ப்பவர்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இவ்வாறு குவிந்து கிடக்கும் குப்பைகள் தொடர்பில் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு குறித்த பகுதிகளிலிருந்து குப்பைகளை அகற்றித் தருமாறு மக்களினால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பகுதியைச் சுத்தமாக பாதுகாப்பது யாழ்.மாநகர சபையின் பொறுப்பல்லவா? யாழ்.மாநகர சபை முதல்வரே இது உங்களின் கவனத்திற்கு….


Previous Post Next Post