யாழில் தொடரும் தற்கொலைகள்! கடிதம் எழுதி வைத்து விட்டு இளம் தாய் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக அதிகரித்து வரும் தற்கொலைகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று இளம் தாய் ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

அரியாலைப் பகுதியைச் சேர்ந்த நகுலேஸ்வரன் நிரோஜினி (வயது-31) என்ற ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

கணவரும் தாயாரும் வேலைக்குச் சென்றுவிட மகன் கல்வி நிலையத்திற்குச் சென்றிருந்தபோது இவர் தூக்கில் தொங்கி உயிரிழந்துள்ளார்.

சடலம் காணப்பட்ட இடத்தில் கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. “என்னுடைய சாவுக்கு யாரும் காரணம் இல்லை, நான் அப்பாவிடம் செல்கிறேன். கணவர், தாய் ஆகியோரிடம் மன்னிப்புக் கேட்கின்றேன். மகனை நன்றாகப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post Next Post