கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வளர்ப்பு நாய்க்கு நடந்த கதி! (படங்கள்)

உலகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்கொல்லி நோயான கொரோனா, தற்போது நாய்க்கும் தொற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஹொங்கொங்கில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் வளர்ப்பு நாய்க்கும் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டு, அந் நாய் விலங்குகள் காப்பகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை கொங்கொங் அரச சுகாதாரத் துறையினர் நேற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்துள்ளனர்.

கொரோனோ தொற்றால் பாதிக்கப்பட்ட 60 வயது பெண் தற்போது ஹொங்கொங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையிலேயே அவர் வளர்த்து வந்த நாய்க்கும் வைரஸ் தொற்று உள்ளது கண்டறியப்பட்டது. நாய் உண்மையில் கொரோனோ தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளதா? அல்லது அதன் வாய் மற்றும் மூக்கில் சுற்றுச்சூழல் மாசுபட்டதன் விளைவாக பாதிப்பு ஏற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் மேலதிக சோதனைகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனோ வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவி வருகிறது. ஆனால் மனிதர்களிடம் இருந்து விலங்குகளுக்குப் பரவக்கூடும் என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என ஹொங்கொங் விவசாய மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தொற்று அறிகுறிகளுடன் காணப்படும் நாய் தற்போது விலங்குகள் காப்பகம் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. இந்நிலையில் வைரஸ் நோயாளிகளின் செல்லப்பிராணிகளையும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டும் என ஹொங்கொங் சுகாதார திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Previous Post Next Post