யாழில் மூன்று மாணவர்களுக்கு பச்சை மட்டை அடி கொடுத்த அதிபர்!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் அதிபர் மூன்று மாணவர்களுக்கு பச்சை மட்டையால் கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

இதனால் கடுமையான காயங்களுக்குள்ளான லக்ஷ்மன், லக்சன் ஆகிய இரட்டையர் உட்பட மூன்று சிறுவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒன்பது வயதுடைய இவர்கள், வகுப்பறையில் ஆசிரியர் இல்லாத சந்தர்ப்பத்தில் விளையாடிய போதே, அதிபர் அவர்கள் பச்சை மட்டையால் தாக்கியதாகக் கூறப்படுகின்றது.

மாணவர்கள் மூவரும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை தற்காலத்தில் உடல் ரீதியான தண்டனை வழங்குவது சட்ட ரீதியாக தடை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post Next Post