இலங்கையில் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று! இருவரின் நிலை கவலைக்கிடம்!!

உலக நாடுகளை உலுக்கிக் கொண்டிருக்கும் உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் தொற்று இலங்கையிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

இலங்கையில் நாளாந்தம் அதிகரிக்கும் கொரோனா தொற்று எண்ணிக்கையினால் தற்போது நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அரசாங்கத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந் நிலையில், இலங்கையில் இனங்காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளில் இருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிய நிலையில் அடையாளம் காணப்பட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 72 ஆக அதிகரித்துள்ளது. நேற்றிரவு மேலும் 2 கொரோனா நோயாளர்களின் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதற்கமைய நேற்றைய தினத்தில் மாத்திரம் இலங்கையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.

அடையாளம் காணப்பட்ட இரண்டு நோயாளர்களின் நிலைமை தீவிரமாக உள்ளதாகவும்இ குறித்த இருவரும் நிமோனியா நிலைமைக்குள்ளாகியுள்ளதாக சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.

இதேவேளை வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சந்தேகிக்கப்படும் 218 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்திற்குரிய நோய் அறிகுறிகளுடன் அதிகமானோர் அங்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 88ஆகும் என சுகாதார பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post