யாழில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளைப் பெற்றெடுத்த தாய்!

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் ஒரே சூலில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

கட்டுவன் மேற்குப் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணபவன் கீர்த்திகா (வயது-30) என்ற பெண்ணே தனது முதலாவது பிரசவத்தின் போது இவ்வாறு நான்கு குழந்தைகளைப் பிரசவித்துள்ளார்.

பிரசவத்திற்காக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
கடந்த மூன்றாம் திகதி ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளையும் ஒரு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த நான்கு குழந்தைகளும் கண்ணாடிப் பெட்டிக்குள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவுமு;, குழந்தைகளும் தாயும் நலமாக இருப்பதாகவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post Next Post