யாழில் விபத்து! வாகனச் சில்லுக்குள் நசியுண்டு குடும்பஸ்தர் உயிரிழப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை 3 மணியளவில் சங்கரத்தைச் சந்திப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவத்தில் நாமகள் வீதி, கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த சரவணபவன் அகிலன் (வயது-45) என்ற இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா கிறீம் ஹவுஸில் பணியாற்றும் குறித்த குடும்பஸ்தர், சக ஊழியரின் பிறந்ததினத்தில் கலந்து கொண்டு விட்டு வடி ரக வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.

இந் நிலையில் சங்கரத்தைச் சந்திப் பகுதியில் வாகனம் சடுதியாக பிறேக் அடித்தபோது பின் பகுதியில் நின்ற குடும்பஸ்தர் வீதியில் விழ, அவரின் மீது வாகனத்தின் பின்பக்க சில்லு ஏறியதாலேயே குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Previous Post Next Post