கிளிநொச்சியில் வாய்க்காலுக்குள் மீட்கப்பட்ட ஆணின் சடலம்! (படங்கள்)

கிளிநொச்சி அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கொம்பன் பகுதி நீர்ப்பாசன வாய்க்காலில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்த நபர் ஒரு பிள்ளையின் தந்தைஎனவும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

அக்கராயன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்ணபுரம் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான மார்க்கண்டு ஜெகதீஸ்வரன் என்பவரே இவ்வாறு சடலமே இனங்காணப்பட்டுள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக கொலையா தற்கொலையா என பல்வேறு கோணங்களில் மேலதிக விசாரணைகளை அக்கராயன் பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்.
Previous Post Next Post