ஆறுதல் அடையும் பிரான்ஸ், இத்தாலி! உயிரிழப்புக்களால் திணறும் அமெரிக்கா!!

கொரோனா வைரஸ் தாக்கத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அமெரிக்காவே அதிக விலை கொடுத்தது. எனினும் உலகளவில் இதுவரை அதிக விலை கொடுத்து வந்த நாடுகள் பலவற்றில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி தென்பட்ட ஆறுதலான தரவு நேற்று பதிவாகியது.

பிரான்ஸ், இத்தாலியில் உயிரிழப்புக்களில் கணிசமான வீழ்ச்சி தென்பட்டது. மார்ச் 19ஆம் திகதிக்கு பின்னர் குறைந்தளவான உயிரிழப்பு நேற்று இத்தாலியில் பதிவானது.

கடந்த 24 மணித்தியாலத்தில் 431 உயிரிழப்புக்கள் பதிவாகின. மூன்று வாரங்களில் குறைவான எண்ணிக்கையாக கடந்த சனிக்கிழமை 510 பேர் இத்தாலியில் உயிரிழந்தனர்.

எனினும் ஞாயிற்றுக்கிழமை அது அதிகரித்து 619 ஆக பதிவாகியிருந்த நிலையில் நேற்று மீண்டும் வீழ்ச்சியடைந்தது.

உலகளவில் கொரோனா வைரஸால் 114,201 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 1,852,533 பேர் தொற்றிற்குள்ளாகினர். 423,399 பேர் குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 5,415 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் அமெரிக்காவில் 1,528 உயிரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 22,105 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக 27,523 பேர் தொற்றிற்குள்ளாகினர். இதுவரை 560,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை கடந்த 24 மணித்தியாலத்தில் பிரான்ஸில் 561 உயரிழப்புக்கள் பதிவாகின. மொத்த உயிரிழப்பு 14,393 ஆக உயர்ந்தது. புதிதாக 2,937 பேர் பாதிக்கப்பட்டனர். இதுவரை 132,591 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் கடந்த 24 மணித்தியாலத்தில் இத்தாலியில் 431 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிரிழப்பு 19,899 ஆக உயர்ந்தது. புதிதாக 4,092 பேர் பாதிக்கப்பட்டவர். இதுவரை 156,363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Previous Post Next Post