யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வேலை செய்துவந்த இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுளார்.

முல்லைத்தீவு – உடையார்கட்டு தெற்கை சேர்ந்த 19 வயதான சுதாகரன் சுவீகன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஊரடங்கு சட்டம் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தின் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்த வீட்டில் அந்த இளைஞன் தங்கியிருந்துள்ளார். இன்று காலை பொருட்களை எடுப்பதற்காக சென்ற மற்றொரு பணியாளரால் குறித்த இளைஞர், தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.

வீட்டில் இருந்த மின்விசிறி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்துவருகின்றனர்.
Previous Post Next Post